இலங்கை

பொதுஜன பெரமுனவின் திட்டம்! இலக்கு வைக்கப்படும் அநுர தரப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்துள்ள “நாமலுடன் கிராமம் கிராமமாக” நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பமாகவுள்ளதாக அக்கட்சியின் பொது செயளாலர் சாகர காரியவசம் கூறியுள்ளார். இது தொடர்பில் ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த அவர்,

“நாமலுடன் கிராமம் கிராமமாக திட்டத்தின் முதல் நிகழ்ச்சி நொச்சியாகம பகுதியில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. அநுராதபுரம் ஜெய ஸ்ரீ மகா போதி அருகே மத வழிபாடுகளை நிகழ்த்திய பின்னர் இந்த திட்டம் ஆரம்பமாகவுள்ளது. நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து மக்களுக்குத் தெரிவிப்பதும், அரசாங்கத்தின் அடக்குமுறைத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதும் ஆகும்.

நாமல் ராஜபக்ச இந்த நிகழ்ச்சியில் இணைய உள்ளார். மேலும் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் உள்ள கிராமங்கள் உட்பட 14,000 கிராமங்களை உள்ளடக்கியதாக நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து தொகுதிகளுக்கும் சென்று முக்கிய ஆர்வலர்களைச் சந்திக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது” என்றார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *