இலங்கை

24 மணிநேரமும் கடவுசீட்டு விநியோகம்

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தை 24 மணிநேரமும் இயங்கச் செய்து நாளொன்றுக்கு 4,000 கடவுசீட்டுக்களை வழங்கும் திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. திட்டத்தை செயற்படுத்துவதற்காக ஓய்வூதியம் பெறுவோர் உட்பட ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

நாட்டில் நிலவும் கடவுச்சீட்டு பற்றாகுறைப் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைச்சரவையால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது. நிபுணர் குழுவின் பரிந்துரைகளுக்கமைய, அரசாங்கம் ஏற்கனவே 1.1 மில்லியன் வெற்றுக் கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யத் தொடங்கியுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஒப்புதலுடன் அரசாங்க அதிகாரிகள் தற்காலிகமாக குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினால் உள்வாங்கப்படவுள்ளனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *