வேட்புமனு தாக்கல் முடிந்த பின்னரே உள்ளூராட்சி தேர்தலுக்கான திகதியை அறிவிக்க முடியும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அம்பாறையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூராட்சி மன்ற தேர்தல் சட்டத்தின் பிரகாரம், 14 நாட்கள் கட்டுப்பணம் செலுத்துவதற்கு ஒதுக்கப்படும். கட்டுப்பணம் செலுத்துவதற்கான கால அவகாசம் நிறைவடைந்த பின்னர் 17ஆம் நாள் நண்பகல் 12 மணிவரை மூன்றரை நாட்கள் வேட்புமனுக்களை ஏற்றுக் கொள்வதற்காக ஒதுக்கப்படும்.
வேட்புமனு தாக்கல் முடிவடைந்ததன் பின்னரே உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.