உலகம்

ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்ய அமெரிக்க தீர்மானம்

அமெரிக்காவின் (United States) சமூக பாதுகாப்பு நிறுவனம், பணியாளர்களை குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. குறித்த நிறுவனத்தில் பணிபுரியும் 7,000 பணியாளர்கள் பணியிலிருந்து நீக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.10 மில்லியன் வயோதிப அமெரிக்கர்களுக்குச் சலுகைகளை வழங்கும் இந்த நிறுவனத்தில் பணியாளர்களின் அளவை குறைப்பதற்கான நடவடிக்கை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினது (Donald Trump) தீர்மானமாகும்.

ஒவ்வொரு மாதமும் 73 மில்லியன் ஓய்வுபெற்ற மற்றும் விசேட தேவையுடைய அமெரிக்கர்களுக்குக் காசோலைகளை அனுப்பும் சமூக பாதுகாப்பு நிறுவனம் அதன் பணியாளர்களை 12 சதவீதத்திற்கும் அதிகமானோரைக் குறைக்கப் போவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமது பிராந்திய அலுவலகங்களை மூடவுள்ளதாகவும் அமெரிக்க சமூக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *