நரேந்திர மோடி இலங்கைக்கு வருகை தர உள்ள நிலையில், இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரும் துணை உயர் ஸ்தானிகரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியப் பிரதமர் அநுர குமார் திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் நாட்டிற்கு வருகை தர உள்ளார். மன்னார் மின் உற்பத்தித் திட்டம் தொடர்பில் மோடியின் சகாவான அதானி தரப்புக்கும் இலங்கைக்கும் சிறு விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த பயணம் அமைந்திருப்பது பார்க்ப்படுகிறது.
வியாழக்கிழமை வரை, இந்தத் திட்டம் உண்மையில் எடுத்துக்கொள்ளப்படுமா என்று எரிசக்தி அமைச்சகம் கேட்டதற்கு அதானி பதிலளிக்கவில்லை. இந்தியப் பிரதமர் இலங்கை வருகையை கடந்த புதன் அன்று அறிவித்தார்.
அறிவிப்பு வெளியான இருபத்தி நான்கு மணி நேரத்திற்குப் பிறகு, இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரும் துணை உயர் ஸ்தானிகரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. இரண்டு மணி நேரம் அவர்கள் மூவரும் விவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
கலந்துரையாடலில், 2023 ஆம் ஆண்டு ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்கேவுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தத்தின் தொடர்ச்சி மற்றும் திருகோணமலையில் எண்ணெய் குழாய் இணைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ரணில் விக்மசிங்க, கடந்த வாரம் இந்தியாவின் புது டில்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அதானி திட்டத்தை நிறுத்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்திய பிரதமர் ஆழ்ந்த கவலையை தெரிவித்திருந்தார். இந்தியாவுக்கு சென்று நாடு திரும்பிய ரணில் விக்ரமசிங்கே கருத்து தெரிவிக்கையில், “நல்ல பதில் எதுவும் கிடைக்கவில்லை. மீதமுள்ள பணிகளை முடிக்க இந்தியப் பிரதமர் இலங்கை வருகிறார். மோடியின் வருகை குறித்து அரசாங்கம் அதிகம் பேசவில்லை,” என்று முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.