- புத்தளம் நுரைச்சோலைப் பகுதியில் இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தவறுதலாக விழுந்த நிலையில் பின்னால் வந்த வாகனம் மோதி விபத்துக்குள்ளாகி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் நுரைச்சோலை ஆண்டாங்கன்னி பகுதியில் நேற்று (10.12.2024) இரவு இடம்பெற்றுள்ளது.
பாலாவியிலிருந்து கற்பிட்டி நோக்கி தந்தையும் மகனும் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். இதன்போது, பின்னால் அமர்ந்திருந்த மகன் தவறுதலாக கீழே விழுந்துள்ளார்.