இலங்கைவர்த்தகம்

இலங்கையில் வங்கிக் கணக்கு திறப்பவர்களுக்கு தேசிய அடையாள அட்டை அவசியம்!

இலங்கையில் எதிர்வரும் காலங்களில் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனங்களில் ஏதேனும் கணக்கு ஆரம்பிக்க வேண்டுமாயின் ஆட்பதிவு திணைக்களத்தினால் வழங்கப்படும் தேசிய அடையாள அட்டை      இலக்கம் கட்டாயம் என  இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

தேசிய அடையாள அட்டை இலக்கம் வழங்காமல்
ஏதேனும் கணக்கு தொடங்கப்பட்டிருந்தால், கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தேசிய அடையாள அட்டை எண்ணை இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னதாக அந்தந்த வங்கிகளில் வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சில கணக்கு வைத்திருப்பவர்கள் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு பதிலாக வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திர இலக்கத்தை வழங்கி வங்கி கணக்குகளை ஆரம்பித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இலங்கையர் அல்லாத ஒருவர் செல்லுபடியாகும் வெளிநாட்டு கடவுச்சீட்டு இலக்கத்தை வழங்குவதன் மூலம் வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கணக்கை ஆரம்பிக்க முடியும்.

வர்த்தக வங்கி அல்லது நிதி நிறுவனம் சரிந்து விட்டால் இழப்பீடு பெற தேசிய அடையாள அட்டை எண் அவசியம் என மத்திய வங்கி தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *