இலங்கை

முதியவரின் கழுத்தில் பாய்ந்த கூறிய தடி- சத்திரசிகிச்சை மேற்கொண்ட வைத்தியர்கள்!

வவுனியா பொது வைத்தியசாலையில் கழுத்தில் கூரிய தடி ஒன்று குற்றி உயிருக்கு ஆபத்தான நிலையில், அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு வைத்தியர்கள் மேற்கொண்ட சத்திர சிகிச்சையினால் கூரிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டார்.

குறித்த சத்திர சிகிச்சை நேற்றுமுன்தினம் (24.12.2024) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கழுத்தில் கூரியதடி ஒன்று குற்றி மறுபக்கம் வந்த முதியவர் ஒருவர் ஆபத்தான கட்டத்தில் வவுனியா வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த முதியவருக்கு வைத்தியசாலையில் உரிய நேரத்தில் விரைவாக முன்னெடுக்கப்பட்ட சத்திர சிகிச்சை மூலம் அவரது கழுத்தில் குற்றிய தடி அகற்றப்பட்டதுடன் அவர் உயிராபத்தின்றி காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சத்தி்ர சிகிச்சையினை உணர்வழியியல் மருத்துவ நிபுணர் நாகேஸ்வரன் தலைமையிலான மயக்கமருந்து அணியினருடன் இணைந்து சத்திர சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

 

Paristamilnews.com

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *