இலங்கைவர்த்தகம்

வெதுப்பக உற்பத்தி குறித்து வெளியான குற்றச்சாட்டுகள்!

முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலை தொடர்ந்தும் அதிகரித்துக் காணப்படுவதாக நுகர்வோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தற்போது சந்தையில் முட்டை ஒன்று 25 முதல் 30 ரூபாவிற்கு இடைப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகின்ற போதிலும் இதுவரையில் முட்டை சார்ந்த வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைவடையவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் முட்டையின் விலை குறைவடைந்ததனால்  வெதுப்பக உற்பத்திகளின் விலையைக் குறைக்க முடியாது என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

<span style=font size 16px>அத்துடன் வெதுப்பக உற்பத்திகளின் விலை குறைக்கப்பட வேண்டுமாயின் கோதுமை மா மற்றும் வெண்ணெய் என்பவற்றின் விலையும் குறைவடைய வேண்டும் என தெரிவித்துள்ளார்<span>

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *