இலங்கைகல்வி

2025ஆம் ஆண்டு பாடசாலை நாட்களின் புதிய திருத்தம்- முதலாம் தவணையில் தாமதம்!

எதிர்வரும் 2025ஆம் ஆண்டு பாடசாலை நடத்தப்படும் நாட்களின் எண்ணிக்கையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய, அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களின் வருடாந்த பாடசாலை வருகை 210 நாட்கள் என்ற தேவை 181 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.

விடுமுறை நாட்கள் இருப்பதன் காரணமாக பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

 

2024 ஆம் கல்வியாண்டுக்கான மூன்றாம் தவணையை நிறைவு செய்வதற்கு ஜனவரி 02 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை பாடசாலையின் முதல் மூன்று வாரங்கள் நடைபெறும்.

2025 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணைக்கான பாடசாலை ஆரம்பம் ஜனவரி 27 ஆம் திகதி நடைபெறும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறை நாட்கள் இருப்பதன் காரணமாக பாடசாலைகளின் முதலாம் தவணை ஆரம்பிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

மேலும் 2025 ஆம் ஆண்டிற்கான 26 பொது விடுமுறை நாட்களில், வார இறுதி நாட்களில் 04 விடுமுறைகள் மட்டுமே உள்ளன, ஏனைய அனைத்து பொது விடுமுறைகளும் வார நாட்களில் உள்ளன.

அதற்கமைய, 210 நாட்களுக்கு பாடசாலை செயற்பாடுகளை நடத்த முடியாது என தெரிவித்த கல்வி அமைச்சு, 2025 ஆம் ஆண்டிற்கான பாடசாலை நாட்களை 181 நாட்களாக மட்டுப்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

 

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *