இலங்கை

நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர்!

நெருக்கடியான காலங்களிலும் பொதுமக்களுக்கு சேவையாற்ற அரசு அர்ப்பணிப்புடன் செயலாற்றுகிறது. முன்னேற்றமடையும் உறுதியுடன் அனைவரும் 2025ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன் என பிரதமர் ஹரிணி அமரசூரிய கூறியுள்ளார்.

2025ஆம் ஆண்டின் பிறப்பையொட்டி நாட்டு மக்களுக்கு தனது புத்தாண்டு வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்ட போதே பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பிரதமர் விடுத்துள்ள புதுவருடச் செய்தியில் மேலும்,

“இலங்கையர்களான எங்களுக்கு கடந்த ஆண்டு உண்மையில் மாற்றத்தை ஏற்படுத்திய ஆண்டாகும். பேதங்கள் இன்றிஒன்றாக இணைந்து தூய்மையான மற்றும் மக்களை மையப்படுத்திய அரசியல் கலாசார மாற்றத்தை இந்த நாட்டு மக்கள் தெரிவு செய்துள்ளனர்

ஒவ்வொரு பிரஜையும் கண்ணியமான மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும். முன்னேற்றமடையும் உறுதியுடன் அனைவரும் 2025ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்க நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுக்கின்றேன்.

பொறுப்பு வாய்ந்த அரசாங்கம் என்ற அடிப்படையில் பொருளாதாரம் தொழிற்துறை மற்றும் கல்வி உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளின் ஊடாக நாட்டை கட்டியெழுப்புவதில் நாம் கடமைப்பட்டுள்ளோம்.

ஒவ்வொரு பிரஜையும் இனம், பாலினம் அல்லது மதம் என்ற பேதங்களைக் கடந்து அமைதியான, சுதந்திரமான, கண்ணியமான மற்றும் பரிபூரணமான வாழ்க்கையை வாழக்கூடிய எதிர்காலத்தை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

ஒரு தேசமாக ஒன்றிணைந்து செயலாற்றுவதற்கு கடந்த காலங்களில் எமக்கு பல சந்தர்ப்பங்கள் காணப்பட்டன. எனினும் குறித்த தருணங்களின் நன்மைகளை முழுவதுமாக அடைவதில் நாம் தோல்வி கண்டோம்.

எவ்வாறெனினும் அவ்வாறு கிடைத்துள்ள சந்தர்ப்பங்களை தவற விடாது அவற்றை பாதுகாத்துக்கொள்ள நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *