கடந்த 24 மணித்தியாலங்களில் மேற்கொள்ளப்பட்ட விசேட போக்குவரத்து நடவடிக்கையின் போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 7,265 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, போக்குவரத்து விதிகளை மீறியதற்காக 1059சாரதிகள், அனுமதிப்பத்திரம் இல்லாமல் பயணித்த குற்றங்களுக்காக 614 சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை அதிக வேகத்தில் பயணித்த 54 சாரதிகள் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்திய 57 சாரதிகளுக்கு எதிராகவும் இவ்வாறு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் மதுபோதையில் வாகனம் செலுத்திய 529 சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.