ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 2025 ஆம் ஆண்டின் முதல் நாளிலே “சுத்தமான இலங்கையை” 2025 ஆம் ஆண்டு நிறைவடைவதற்குள் உருவாக்கவுள்ளதாக உரைத்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து நாடு முழுவதிலும் உள்ள அமைச்சர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அனைத்து அரச ஊழியர்களும் ஆறு விடயங்களைக் கொண்ட உறுதிமொழியை உறுதிசெய்து, திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்தனர்.
இந்த சத்தியப் பிரமாணம் அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் வழமையான புத்தாண்டு பிரமாணத்தில் ஒரு திருத்தமாக பார்க்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீது பல விடயங்களில் விமர்சனங்கள் அடுக்கப்பட்டாலும், அவர் கொழும்பை அழகுபடுத்துவது என்ற ஒரு எண்ணக்கருவை கொண்டிருந்தார்.
எனினும் இது அநுர அரசில் நாடு முழுதும் பரந்துப்பட்ட திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வீதியோரங்களில் குப்பைகள் குவிந்து கிடப்பதும், பெரும்பாலான பொது இடங்கள் ஆண்களுக்கான திறந்தவெளிக் கழிப்பிடங்களாகவும் இருந்த இலங்கையில்தான் சில காலம் நாம் வாழ்ந்துள்ளோம்.
அபிவிருத்திக்கு பெயர்போன சிங்கப்பூரில் கடந்த காலங்களில் தரையிறங்கும் போது விமான நிலையத்தில் காணப்படும் வளங்கள் இலங்கைக்கும் அந்த நாட்டுக்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக்காட்டும்
ஆனால் இப்போது இலங்கைக்கும் ஏனைய அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கும் வித்தியாசம் இல்லை.
இதற்கமைய நாட்டை முழுமையாக தூய்மை இடமாக மாற்றுவதற்காக அரசாங்கம் முன்னெடுத்த திட்டங்கள் மற்றும் மக்களின் மனப்பான்மையில் படிப்படியாக முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை தற்போது அவதானிக்க முடிகிறது.
சுத்தமான இலங்கை” உறுதிமொழியில் கூறப்பட்டுள்ளபடி, பொருளாதார வளர்ச்சிக்கு “நாடு என்ற வகையில் நாம் தவறவிட்ட ஒற்றுமையை” மீண்டும் கட்டியெழுப்புவது அவசியமாகும்.தூய்மையான இலங்கையின் முதல் சில நாட்களில் ஓரளவு முறைசாரா தன்மை இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். எடுத்துக்காட்டாக, விமானத்தின் தூய்மை தொடர்பான பொலிஸாரின் நடவடிக்கை உடனடியாக செயல்படுத்தப்பட்டது.
வாகனங்களில் சட்டவிரோத மாற்றங்கள், உரத்த ஒலியெழுப்பிகள் மற்றும் பொது இடையூறுகளை ஏற்படுத்தும் பிற சாதனங்கள் சட்டத்திற்கு இணங்க மேற்கொள்ளப்பட்டது, ஆனால் இது குறித்து முன் விழிப்புணர்வு முழுமையான மக்கள் மயப்பட்டுள்ளதா என்பது கேள்விக்குறியே.
இதை அரசாங்கம் எவ்வாறு கையாளும் என்பதை நாம் நடைமுறையின் ஊடாகவே காணத்தூண்டும்.