கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு நடுக்கடலில் குழந்தை பிறந்த சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மொராக்கோ நாட்டிலிருந்து ஸ்பெயினுக்கு சொந்தமான கானரி தீவுகள் நோக்கி 60 புலம்பெயர்பெயர்பவர்களுடன் படகொன்று பயணித்துக்கொண்டிருந்த போது படகில் பயணித்த கர்ப்பிணிப் பெண்ணொருவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
சிறிது நேரத்தில் சக பயணிகளின் உதவியுடன் அழகான பெண் குழந்தையொன்று அந்தப் பெண்ணுக்கு பிறந்துள்ளது.
நடுக்கடலில், பிறந்த பிள்ளையுடன் அந்தப் பெண் படகில் அமர்ந்திருப்பதைக் காட்டும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
அந்தப் படகிலிருந்த 14 பெண்கள், 4 சிறுவர்கள் உட்பட 60 பேரையும் ஸ்பெயின் நாட்டு கடலோரக் காவல் படையினர் மீட்டுள்ளனர்.
குழந்தை பெற்றெடுத்த அந்தப் பெண்ணும் குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் இருவரும் நன்றாக இருப்பதாக அந்நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.