வெளிநாடு செல்ல முற்பட்ட தமிழ் இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான ஆவணங்களை சமர்ப்பித்து புதுடெல்லி செல்ல முற்பட்டவரே இவ்வாறு இன்று காலை விமான நிலைய குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம், இளவாலை பகுதியை சேர்ந்த 35 வயதான இளைஞனே கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியா ஊடாக ஐரோப்பா நோக்கி பயணிக்கும் நோக்கில் போலியான ஆவணங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.