பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் இம்ரான் கான், 2023ஆம் ஆண்டு ஆகத்து மாதம் முதல் சிறையில் உள்ளார். அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், இம்ரான் கான் மீதான வழக்கு விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தார். வழக்கில் இம்ரான் கானின் மனைவி புஸ்ரா பீவிக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அல்-காதிர் அறக்கட்டளை மூலம் இம்ரான் கான் 190 மில்லியன் பவுண்டுகள் ஊழல் செய்த வழக்கில் இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.