முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் பிறந்தநாளான இன்று அரசியல் தலைவரகள் புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “அளவற்ற வறுமையைத் தாண்டினார். கூத்தாடி என்ற கூற்றைச் சுக்குநூறாக உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றின் மையம் ஆனார். அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார். அவரே தமிழக அரசியலின்அதிசயம் ஆனார். இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப் பிறந்தநாள் வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.
அதேபோல இந்திய பிரதமர் நரேந்திர மோடி எம்ஜிஆரை பற்றி புகழ்ந்து பேசும் வீடியோவை வெளியிட்டு அவருக்கு புகழாரம் செலுத்தியுள்ளார். பதிவில், “எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஏழைகளுக்கு அதிகாரம் அளிக்கவும், சிறந்த சமுதாயத்தை உருவாக்கவும் அவர் மேற்கொண்ட முயற்சிகளால் நாங்கள் பெரிதும் ஈர்க்கப்பட்டுள்ளோம்” பதிவிட்டுள்ளார்.