நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனம் அத்தியாவசியமானது என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மப்பிரிய திசாநாயக்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறான வாகனம் என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பணிகளை முன்னெடுப்பதற்கு வாகனங்கள் இன்றியமையாதது என சுட்டிக்காட்டியுள்ளார்.
நவீன வாகனமொன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். பழைய வாகனங்களில் உதிரிப் பாகங்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும் அவற்றை பழுதுபார்ப்பது செலவினை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.
சில அரச வாகனங்கள் பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் கிடைக்கப்பெறவில்லை என குறிப்பிட்டுள்ளார்.