கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் dominic and the ladies’ purse. மம்மூட்டி ஹீரோவாக நடித்துள்ள இப்படம் வருகிற 23 தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கு பின் கவுதம் மேனன் யாரை வைத்து படத்தை இயக்கப்போகிறார் என அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளிவரவில்லை. ஆனால், வெற்றிமாறனின் கதையை வைத்து கவுதம் மேனன் இயக்கப்போவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
இப்படத்தில் சிம்பு நடிக்கப்போவதாக கூறப்பட்ட நிலையில், சிம்பு இல்லை, நடிகர் ரவி மோகன் தான் இப்படத்தின் ஹீரோ என்றனர். சமீபத்திய பேட்டியில் தனது அடுத்த படம் குறித்து பேசிய இயக்குநர் கவுதம் மேனன், “வெற்றிமாறன் கதையை வைத்து படம் இயக்குவதற்கான டிஸ்கஷன் போய்க்கொண்டு இருக்கிறது. அது மிகவும் சுவாரஸ்யமான கதையாகும். இப்படத்தில் ஹீரோவாக ரவி மோகன் நடிப்பதற்கு பேச்சு வார்த்தை நடந்து வருகிறது” என கூறியுள்ளார். விரைவில் இதற்கான அறிவிப்பிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார்கள்.