பிக்பாஸ் 8 கடந்த வருடம் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி. விஜய் சேதுபதி தொகுப்பாளராக களமிறங்கிய நிகழ்ச்சி, கமல்ஹாசன் இடத்தை நிரப்பினாரா என்றால் இல்லை. அவருக்கு என்ன வருவோ, அவரது ஸ்டைல் என்னவோ வெளிக்காட்டியுள்ளார்.
பிக்பாஸ் 8, ஜனவரி 19ம் தேதி படு மாஸாக நடந்து முடிந்துள்ளது. 8வது சீசன் வெற்றியாளராக முத்துக்குமரன் ஜெயித்துள்ளார், அடுத்தப்படியாக சௌந்தர்யா 2ம் இடம் பிடித்துள்ளார். சீசனில் விருது வென்ற அனைவரின் தீர்ப்பும் ரசிகர்களால் வரவேற்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிக்பாஸ் 8 நிகழ்ச்சியை முடித்த கையோடு சௌந்தர்யாவின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் சௌந்தர்யா தனது காதலர் விஷ்ணுவுடன் எடுத்த புகைப்படம் தான்.