சினிமா

ஜாக்குலின் அழுதபடி எலிமினேட் ஆன போது சிரித்தது ஏன்.. கூறிய சத்யா

பிக்பாஸ் 8வது சீசன் ஒரு மேஜிக்காக முடிந்துவிட்டது. ஆரம்பத்தில் பிக்கப் ஆகாமல் இருந்த பிக்பாஸ் 8 நிகழ்ச்சி போக போக மக்களின் பேராதரவை பெற தொடங்கியது. போட்டியிட்ட போட்டியாளர்கள் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டனர்.

பிரபலமாக இருந்தாலும் அவர்களுக்கு பிக்பாஸ் 8 நிகழ்ச்சி பெரிய ரீச் கொடுத்துள்ளது என்றே கூறலாம். பிக்பாஸ் பிறகு பெரிய வளர்ச்சி அடைய வேண்டும் என்பது ரசிகர்களின் வாழ்த்தாக உள்ளது. பிக்பாஸில் எலிமினேட் ஆனவர்களில் ஜாக்குலின் எலிமினேஷன் மக்களுக்கு சோகத்தை கொடுத்தது. கதறி கதறி அழுதபடி எலிமினேட் ஆனபோது சத்யா பின்னால் சிரித்துக்கொண்டிருந்தார், ரசிகர்களுக்கே கோபத்தை ஏற்படுத்தி இருந்தது.

கடைசி நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கேட்க, சத்யா நான் நிஜமாகவே நீங்கள் வெளியேறியதற்கு வருந்துகிறேன். அங்கு சிலரின் முக பாவனை அப்படி இருந்தது, அதனால் தான் சிரித்தேன். உங்களுக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, வருத்தப்பட வைத்திருந்தால் சாரி என கேட்டுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *