தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் 25 முதல் 30 ஆண்டுகள் வரையில் ஆட்சியைத் தொடரும் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் ஹேமந்த தெரிவித்துள்ளார்.ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி 3 வீத மக்கள் வாக்குப் பலத்தைக் கொண்டிருந்தது என தெரிவித்துள்ளார். சரியான திட்டங்களை வகுத்து நடைமுறைபடுத்தியதன் மூலம் நாட்டின் ஆட்சியை கைப்பற்ற முடிந்துள்ளது என தெரிவித்துள்ளார். இவ்வாறான பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐந்து ஆண்டுகள் மட்டுமன்றி 30 ஆண்டுகள் வரையில் ஆட்சியை தொடரும் என வெளியிட்டுள்ளார்.