அஜித்தின் ரசிகர்கள் கடைசியாக திரையில் பார்த்தது துணிவு படத்தில். பின் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி படத்திலும், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்திலும் நடித்து முடித்துள்ளார். விடாமுயற்சி படம் ரிலீஸிற்கு தயாராகி வருகிறது. விடாமுயற்சி படத்தில் அஜித்தை தாண்டி அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன், ஆரவ் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைப்பில் இடம்பெற்ற Sawadeeka பாடல் ஹிட்டடித்தது, இப்பாடலுக்கு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டார்கள். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் பிப்ரவரி மாதம் 6ம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ப்ரீ புக்கிங் மாஸாக நடந்து வருகிறது. ஓவர்சீஸில் படம் 30 முதல் 50k கலெக்ஷன் செய்துள்ளதாக கூறப்படுகிறது.