இலங்கை

உச்சத்தை தொட்ட பச்சை மிளகாய் விலை

சந்தையில் பச்சை மிளகாயின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர். ஒரு கிலோ பச்சை மிளகாய் 1800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பச்சை மிளகாயின் மொத்த விற்பனை விலை 1,780 ரூபாவாகவும், உள்ளூர் சந்தைகளில் 1,800 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இலங்கை உணவு வகைகளில் முக்கிய மூலப்பொருளான பச்சை மிளகாயை பல குடும்பங்களுக்கு கட்டுப்படியாகாத ஆடம்பர பொருளாக மாறியுள்ளது.

சீரற்ற வானிலை, குறைந்த அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுகள் ஆகியவைகளே விலை அதிகரிப்பு காரணம் என தெரிவிக்கப்படுகிறது. தேங்காய் மொத்த விற்பனை விலை 130 ரூபாய் முதல் 150 ரூபாயும், உள்ளூர் சந்தையில் 140 ரூபாய் முதல் 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *