இலங்கை

இந்தியாவுடன் இலங்கையை இணைக்கும் பாலத்தின் அவசியம்

இலங்கையை இந்தியாவுடன் இணைக்கும் பாலம் வர்த்தகத்தை எளிதாக்கும் என ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தின் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சொத்துக்களை, பொருளாதார மீட்சிக்காகப் பயன்படுத்தவேண்டிய முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். விவேகமாக முடிவெடுக்காவிட்டால், ஏராளமான வளங்கள் இருந்தபோதிலும், இலங்கை ஆழமான பொருளாதார நெருக்கடியில் விழும் அபாயம் உள்ளது என்று அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கைக்கு ஒரு முக்கிய பங்காளியாக இந்தியா இருப்பதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தியதோடு ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது சாலை இணைப்பு தொடர்பான விவாதங்கள் இல்லாமையை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பொருளாதார வளர்ச்சி மற்றும் சுற்றுலா மேம்பாடு உட்பட இந்தியா உடனான இணைப்பின் சாத்தியமான நன்மைகளையும் அவர் எடுத்துரைத்துள்ளார்.

இலங்கையின் வடக்குப் பகுதிக்கு பயனளிக்கும் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இத்தகைய முயற்சிகளின் சாத்தியமான நன்மைகளை விளக்க, பஹ்ரைன் மற்றும் சவுதி அரேபியா இடையே பாலம் மற்றும் பிரான்ஸ்- இங்கிலாந்து இடையிலான சுரங்கப்பாதை போன்ற உட்கட்டமைப்பு திட்டங்களின் சர்வதேச உதாரணங்களை காட்டியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *