இலங்கை

பாதசாரி கடவையில் வயோதிப் பெண்ணை மோதி தள்ளிய பொலிஸார்

கிளிநொச்சி ஏ9 பிரதான வீதியில் உணவகமொன்றிற்கு முன்பாக உள்ள பாதசாரி கடவையில் வீதியின் மறுபக்க கடக்க முற்பட்ட வயோதிபப் பெண் ஒருவரை உந்துருளியில் பயணித்த பொலிஸார் மோதியுள்ளனர். தலையில் படுகாயமடைந்த பெண் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உந்துருளியில் பயணித்த இரண்டு பொலிஸாரும் அதிக மது போதையில் காணப்பட்டுள்ளனர். அத்துடன், அவர்கள் பயணித்த உந்துருளியில் மதுபானங்களும் இருந்தமை பொது மக்களால் அவதானிக்கப்பட்டுள்ளது. வயோதிப பெண் பாதசாரி கடவையில் கடந்து செல்வதனை அவதானிக்காது வாகனத்தை செலுத்தியதன் காரணமாக விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *