இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. சந்திப்பு, நேற்றையதினம்(25.01.2025) நல்லூரில் உள்ள சிவஞானத்தின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
புதிய அரசியலமைப்பு தொடர்பான தமிழ்க் கட்சிகளின் கலந்துரையாடலொன்றுக்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அழைப்பு விடுத்திருந்தார். அவ்வாறான அழைப்பு எதுவும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கு உரிய முறையில் வரவில்லை எனவும் அவ்வாறு அழைப்பு வந்தால் அதனை பரிசீலிக்க தயார் என்றும் சி.வி.கே.சிவஞானம் அண்மையில் தெரிவித்திருந்தார். இருவருக்குமிடையில் சந்திப்பு இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரனும் பங்குபற்றியிருந்தார்.