அஜித் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லீ ஆகிய படங்களில் நடித்து முடித்துவிட்டார். அடுத்த பல மாதங்களுக்கு கார் ரேஸில் கவனம் செலுத்த இருப்பதால் அடுத்த படம் தொடங்க தாமதம் ஆகிறது. ரேஸ் எல்லாம் முடிந்தபிறகு தான் நான் அடுத்த படத்தை ஒப்புக்கொள்வேன் என அஜித்தே பேட்டியில் கூறி இருந்தார்.
அஜித் அடுத்து நடிக்க இருக்கும் படத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ரெட் ஜெயண்ட் தயாரிக்கப்போகும் படம் இது என்றும், அதை விஷ்ணுவர்தன் இயக்க வாய்ப்பிருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.