அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களில் முதல் இடத்தில் இருப்பவர் விஜய். படங்கள் நடித்து வந்தால் இவரது பட சாதனைகளும், பாக்ஸ் ஆபிஸிம், அவரது சம்பளம் என எல்லாம் உயர்ந்துகொண்டே தான் வரும். ஆனால் அவரோ நான் சம்பாதித்தது போதும் மக்களுக்காக உழைக்க வேண்டும் என அரசியலில் களமிறங்கியுள்ளார்.
69வது படத்துடன் இனி நடிக்கப்போவதில்லை என்றும் முடிவு எடுத்துவிட்டார். அவரது அடுத்த டார்க்கெட் 2026ம் ஆண்டின் தேர்தல் தான். நடிகர் விஜய்யின் அரசியல் என்ட்ரி குறித்து நடிகரும், இயக்குனருமான பார்த்திபனிடம் கேட்கப்பட்டுள்ளது. அவர், நான் அனைத்தையும் நேர்மறையாக பார்ப்பேன், நண்பர் விஜய் இப்போது அரசியல் வரவேண்டும் என்ற அவசியமே இல்லை.
பெரிய ராஜாங்கம் நடத்தி வருகிறார், அடுத்த சூப்பர் ஸ்டார் அவர் தான். இப்படியொரு இடத்தை விட்டுவிட்டு அவர் எதற்கு அரசியல் வர வேண்டும், அப்படியென்றால் அவர் ஏதோ நல்லது செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவரை தடுத்து நிறுத்துவதற்கு பதில் சப்போர்ட் பண்ணிவிடலாம். மாறுதல் ஒன்றே மாறாதது. விஜய் முனைப்புடன் அரசியலில் செயல்படட்டும் என கூறியுள்ளார்.