உலகம்

4 நாட்கள் வேலை! ஒப்புதல் அளித்துள்ள பிரித்தானிய நிறுவனங்கள்

வாரத்துக்கு 5 நாட்கள் வேலை முறை என்பது சோர்வை ஏற்படுத்துவதாக கூறி 4 நாட்கள் மட்டுமே வேலை பார்க்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த நாடுகள் முயற்சித்து வருகின்றன. பிரித்தானியா வாரத்துக்கு 4 நாட்கள் வேலை திட்டம் சோதனை முயற்சியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இத்திட்டத்துக்கு 100 நிறுவனங்கள் ஒப்புதல் அளித்தன. திட்டத்தால் சம்பளம், சலுகைகள் எதுவும் குறைக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ள நிலையில், வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை பிரித்தானியாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் நிரந்தரமாக நடைமுறைப்படுத்தி உள்ளன.
200 நிறுவனங்களில் மொத்தமாக 5000 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். வாரத்திற்கு 4 நாட்கள் பணிபுரிவதால் ஊழியர்கள் தங்களின் வாழ்க்கையை சந்தோஷமாகவும், நிறைவுடனும் வாழ முடியும் என தெரிவித்துள்ள நிறுவனங்கள், இது ஊழியர்களின் மனநலனையும் உடல்நலனையும் மேம்படுத்தும் எனவும் கூறியுள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *