உலகின் நீளமான ரயில்வே துறைகள் குறித்து பதிவில் காண்போம். நிலம் மூலம் உலகின் மிகப்பெரிய நாடுகள் ரயில்வே துறைகளின் வலையமைப்பை பரப்பியுள்ளன. உலகில் எந்தவொரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், ரயில்வே துறையின் பங்களிப்பு முக்கியமானதாக உள்ளது.
துறையானது ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தின் வேகத்தை விரைவுப்படுவதுடன், பெரும்பாலான மக்களுக்கு வேலை வாய்ப்பையும் வழங்குகிறது. ஐரோப்பாவின் முக்கிய நாடான ஜேர்மனியில் 16ஆம் நூற்றாண்டில் இருந்து ரயில்வே சேவைகள் உள்ளன. இங்கு ரயில்கள் Deutsche Bahn என்று அழைக்கப்படுகின்றன. ஜேர்மனியின் ரயில்வே துறையின் நீளம் சுமார் 43,468 கிலோ மீற்றர் ஆகும்.
உலகின் 6வது மிக நீளமான ரயில்வே துறை ஆகும். இங்கு சுமார் 21,000 கிலோ மீற்றர் ரயில் பாதைகளில் மின்சாரம் உள்ளது. ஜேர்மனியில் உள்நாட்டு வர்த்தகத்திற்கும் மிக முக்கியமான ஆதாரமாக உள்ள ரயில்வே, பயணிகளுக்கு சிறந்த வசதிகளை வழங்குகிறது.
கனடாவிற்குள் சுமார் 50 கிலோமீற்றர்கள் நீள ரயில் பாதைகள் உள்ளன. இங்கு ரயில் சேவை 1875ஆம் ஆண்டில் தொடங்கியது. பொருளாதார முன்னேற்றத்திற்கு முக்கிய காரணியாக ரயில்வே உள்ள நிலையில், மேற்கு கனடா ரயில்வே வேகமான வளர்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.ஆரம்ப நாட்களில் கனேடிய ரயில்வே முதன்மையாக சரக்கு போக்குவரத்திற்காக பயன்படுத்தப்பட்டது. குறைந்த மக்கட்தொகை மற்றும் பெரிய பரப்பளவு காரணமாக, ரயில்வே பெரும்பாலும் சரக்கு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. கனடாவிற்குள் சுமார் 50,000 கிலோ மீற்றர் நீள ரயில் பாதைகள் உள்ளன.
உலகளவில் 86,000 கிலோ மீற்றர்களுடன் ரயில்வேயை கொண்ட ரஷ்யா 3வது இடத்தில் உள்ளது.
உலகின் மிக நீளமான ரயில் பாதை என்ற சாதனையை இந்நாடு பெற்றுள்ளது. ரஷ்யாவில் ரயில்வே பாதிக்கு மேல் பனி மூடியிருக்கிறது. இதனால் நாட்டிற்குள் 90 சதவீத சரக்கு போக்குவரத்து ரயில்வே மூலம் செய்யப்படுகிறது. இதனால் பொருளாதார செழிப்பில் ரயில்வே ரஷ்யாவில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளது.
பெரிய பரப்பளவு காரணமாக, ரஷ்ய ரயில்கள் குறைந்த கட்டணத்தில் நீண்ட தூரம் பயணிக்க சிறந்தது. அமெரிக்காவின் ரயில்வே துறையின் நீளம் சுமார் 2,50,000 கிலோ மீற்றர்கள் ஆகும். தொலைதூர அமெரிக்க நகரங்களுக்கு ரயில்வே ஒரு முக்கியமான வழியாக உள்ளது.
உலகளவில் மிகப்பெரிய ரயில்வே துறையை அமெரிக்கா கொண்டுள்ளது. இங்கு 1820யில் முதல் ரயில் பாதை உருவாக்கப்பட்டது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம் என்ற பட்டம் பெற்ற அமெரிக்காவின் ரயில்வே, அந்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கிய பங்காற்றியுள்ளது.