ராஜமௌலி தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை எடுத்து வருகிறார். ஆர்ஆர்ஆர் படத்தை அடுத்து மகேஷ் பாபுவை வைத்து SSMB29 படத்தை அவர் இயக்குகிறார். பிரியங்கா சோப்ரா தான் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க போகிறார். தற்போது ஹைதராபாத்தில் ஷூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. எந்த காட்சிகளும் கசிந்துவிட கூடாது என்பதற்காக ஷூட்டிங் ஸ்பாட்டில் யாருக்கும் செல்போன் அனுமதி இல்லை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறதாம்.
SSMB29 படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா மிகப்பெரிய சம்பளம் கேட்டிருக்கிறாராம். அவர் 30 கோடி ரூபாய் சம்பளமாக இந்த படத்திற்கு கேட்டிருக்கிறாராம். மூலமாக இந்தியாவில் மிக அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக பிரியங்கா சோப்ரா மாறி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.












