அரசியல்வாதிகள் கடுமையான விதிகள் விதிமுறைகள் மூலம் மக்களை அடக்கக்கூடாது, மாறாக மக்களை மென்மையுடன் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith) கோரியுள்ளார்.அரசியல்வாதிகள் மக்களிடையே கலந்து, அனைத்து இன மற்றும் மதக் குழுக்களையும் ஒருவருக்கொருவர் நேசிக்க வைக்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் கம்பஹாவில் நிகழ்வு ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.
கோபத்துடனும் வெறுப்புடனும் நீண்ட போர் நடத்தப்பட்டது, ஆனால் இப்போது ஒருவருக்கொருவர் நேசிக்க வேண்டிய நேரம் இதுவாகும் கர்தினால் ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார். அநுர குமார திசாநாயக்க நேற்று வடக்கிற்கு விஜயம் செய்தபோது யாழ்ப்பாணத்தில் மக்கள் அவரை எவ்வாறு அரவணைத்தார்கள் என்பதை காணக்கூடியதாக இருந்தது.
தெற்குடன் சமரசம் செய்ய வடக்கில் உள்ள மக்களிடையே மிகுந்த விருப்பம் இருப்பதைக் காணமுடிந்தது. ஒரு தலைவர் மக்களிடையே எவ்வாறு சென்று அவர்களை மென்மையுடன் அரவணைக்க வேண்டும் என்பதைக் காட்டியதன் மூலம், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்ற அரசியல் தலைவர்களுக்கும் ஒரு முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார் என்றும் கர்தினால் தெரிவித்துள்ளார்.