தமிழ் சினிமாவில் அதிகம் சம்பளம் வாங்கும் இயக்குநர்களில் முக்கியமானவர் நெல்சன் திலீப்குமார். இயக்கிய ஜெயிலர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது ஜெயிலர் 2 படத்தை துவங்கியுள்ளார். தான் ஜெயிலர் 2 படத்திற்கான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அறிவிப்பு வீடியோவே செம மாஸாக இருந்த நிலையில், ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். அனிருத் இசையில் உருவாகும் இப்படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இயக்குநராக மட்டுமின்றி ப்ளடி பெக்கர் படத்தின் மூலம் தயாரிப்பாளராகவும் நெல்சன் திலீப்குமார் அறிமுகமானார். கவின் ஹீரோவாக நடித்த இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு மக்களிடையே வரவேற்பை பெறவில்லை. தமிழநாட்டில் இப்படத்தை வாங்கிய விநியோகஸ்தருக்கு ரூ. 8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனை படத்தின் தயாரிப்பாளரான நெல்சன் திலீப்குமாரின் பார்வைக்கு அந்த விநியோகஸ்தர் எடுத்து சென்றுள்ளார். அந்த பணத்தை நான் தந்துவிடுகிறேன் என நெல்சன் கூறிவிட்டாராம்.
ரூ. 8 கோடி வேண்டாம் ரூ. 6 கோடி கொடுத்தால் போதும் என அந்த விநியோகஸ்தர் கூற, உடனடியாக ரூ. 6 கோடி கொடுத்துவிட்டாராம் இயக்குநர் நெல்சன் திலீப்குமார். வழக்கமாக நஷ்டக்கணக்கை காட்டி தயாரிப்பாளரிடம் பணம் கேட்டால் உடனடியாக கிடைக்காத என திரை வட்டாரத்தில் பேச்சு உண்டு. ஆனால், நெல்சன் திலீப்குமார் உடனடியாக பணத்தை கொடுத்தது, அந்த விநியோகஸ்தருக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தகவல் பிரபல பத்திரிகையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.