இலங்கை

மகிந்த இல்லத்தை ஒப்படைக்க வேண்டும்: அநுர

மகிந்த ராஜபக்ச தனது அதிகாரபூர்வ இல்லத்தை ஒப்படைக்க வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தேவை ஏற்பட்டால் வேறு ஓரு பொருத்தமான வீட்டை வழங்க முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். கல்கமுவ பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர், “அரசியல் வீண் விரயத்தை நிறுத்துமாறு கோரப்பட்டது. அதனை நாம் செய்துள்ளோம். தமது செலவுகளில் 50 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. மகிந்தவிற்கு 30500 சதுர அடியில் பெரிய வீடு எதற்கு? வீட்டை புனரமைப்பதற்காக 47 கோடி ரூபா பணம் செலவிடப்பட்டுள்ளது.

இவ்வாறான செலவுகள் நாட்டின் பொருளாதாரத்திற்கு உசிதமானதல்ல. வீட்டை ஒப்படைக்குமாறு கோரும் போது தம்மை வெளியே போடுவதாக மகிந்த கூறுகின்றார். மகிந்த பத்தாண்டு கால ஜனாதிபதி ஆட்சிக் காலத்தில் வங்கியில் வைப்பிலிடப்பட்ட சம்பளத்தை எடுத்ததில்லை. மஹிந்தவின் புதல்வர் யோஷிதவும் கடற்படையில் பதவி வகித்த காலத்தில் சம்பளப் பணத்தை எடுக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவர்களுக்கு எவ்வளவு பெரிய தொகை சொத்துக்கள் இருக்க வேண்டும்” என்றார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *