அரச சேவை சம்பள உயர்வுக்காக வரவு செலவுத் திட்டத்தில் 90 பில்லியன் ரூபாவை ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். தம்புத்தேகம பகுதியில் (02.01.2025) நடைபெற்ற வைபவம் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அரச சேவையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் எதிர்காலத்தில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். வரவு செலவு திட்டத்தில் அரசு ஊழியர்களின் சம்பளம் அதிகரிப்பு செய்யப்படுமென நிதி அமைச்சக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போதுள்ள சம்பள அளவுகளின்படி ரூபா 7,500 முதல் ரூபா 10,000 வரையிலான தொகை அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.