உலகம்

அமெரிக்காவில் விமான விபத்துகள்… நான்காவது விபத்து

அமெரிக்காவில், கடந்த மாத இறுதி துவங்கி நான்கு விமானங்கள் விபத்துக்குள்ளாகிவிட்டன. புதன்கிழமை, வாஷிங்டனில், ராணுவ ஹெலிகொப்டர் ஒன்றும் பயணிகள் விமானம் ஒன்றும் மோதிய விபத்து, 67 உயிர்களை பலி வாங்கியது.

பிலதெல்பியாவில் வெள்ளிக்கிழமையன்று, மருத்துவ ஜெட் விமானம் அல்லது ஏர் ஆம்புலன்சாக பயன்படுத்தப்படும் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில், ஒரு குழந்தை மற்றும் அதன் தாய் உட்பட 6 பேர் பலியானார்கள். சனிக்கிழமையன்று, சிகாகோவில் விமானங்களை இழுத்துச் செல்லும் ட்ரக் ஒன்று நின்றுகொண்டிருந்த விமானம் ஒன்றின் மீது மோதியதில் அந்த ட்ரக்கை இயக்கிய சாரதி படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிகப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையன்று, Houstonஇலிருந்து டெக்சாஸ் நோக்கிச் சென்றுகொண்டிருந்த விமானம் ஒன்று, புறப்பட்ட சிறிது நேரத்துக்குள், அதாவது, அது உயர எழும்பும் முன், அதன் இறக்கைகளில் ஒன்றில் தீப்பற்றியுள்ளது. விமானத்தில் 104 பயணிகளும் ஐந்து பணியாளர்களும் இருந்த நிலையில், பயணிகள் தீப்பற்றியதைக் கண்டு அலறி சத்தமிட, உடனடியாக விமானம் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. விமானத்திலிருந்த பயணிகள் பேருந்து மூலம் விமான முனையத்துக்கு திருப்பி அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது மட்டும் ஆறுதலளிக்கும் விடயம்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *