உலகம்

ட்ரம்ப் செய்தது தவறு….! சீனா எச்சரிக்கை

டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) வரியை உயர்த்தி தவறு செய்துவிட்டார் என ட்ரம்புக்கு எதிராக சீனா எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்காவுக்குள் வரும் சட்டவிரோத குடியேறிகள் மற்றும் போதைப்பொருட்களை காரணம் காட்டி கனடா, மெக்சிகோ நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதி விதித்து உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இந்த வரி விதிப்புகள் நெருக்கடிகள் தணியும் வரை தொடரும் என்று வெள்ளை மாளிகையும் அறிவித்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு கனடாவும் 25 சதவீதம் வரி விதித்ததுடன் மெக்சிகோ விரைவில் பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் வரி விதிப்புக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,“அமெரிக்காவின் வரிவிதிப்பு சர்வதேச வர்த்தக விதிமுறைகளை மீறுவதாக உள்ளது. அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் என்றும் அமெரிக்கா தனது தவறுகளை திருத்திக்கொள்ள வேண்டும்”என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உலக வர்த்தக கூட்டமைப்பில் (WTO) இதுதொடர்பாக வழக்கு தொடரவுள்ளதாகவும் சீனா எச்சரித்துள்ளது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *