டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் இலங்கையுடன் வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிக்க விரும்புகிறது என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புதிய ராஜாங்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ கூறியுள்ளார்.
இலங்கை நாட்டின் 77 ஆம் ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடிய நிலையில் நாட்டு மக்களுக்கு அமெரிக்கா சார்பாக, இராஜாங்க செயலாளர் மார்கோ ரூபியோ வாழ்த்துகளை வெளியிட்டுள்ளார். இலங்கை சுதந்திரம் பெற்றதிலிருந்து 77 ஆண்டுகளில், இரண்டு நாடுகளும், பரஸ்பர நன்மையை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசுபிக் பிராந்தியம் முழுவதும் ஸ்திரத்தன்மை செழிப்பை மேம்படுத்துவதற்காகவும், இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீட்டை அதிகரிப்பதற்கும் அதன் பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும் அமெரிக்கா எதிர்ப்பார்க்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.