உலகின் அழகான கையெழுத்து கொண்ட பெண் யார் என்ற தகவலை பதிவில் தெரிந்து கொள்ளலாம். கல்வி என்பது வாழ்க்கையின் இன்றியமையாத பகுதியாகும். கற்றல் செயல்பாட்டில் கையெழுத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
நல்ல கையெழுத்து கொண்ட மாணவர்கள் கருத்துக்களை தெளிவாக வெளிப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல் ஆசிரியர்களின் பாராட்டையும் பெறுகிறார்கள். பெரும்பாலும் ஒரு திறமையாகக் காணப்படுகிறது. மேலும் வழக்கமான பயிற்சியின் மூலம், மாணவர்கள் காலப்போக்கில் தங்கள் கையெழுத்தை மேம்படுத்த முடியும்.
நேபாளத்தைச் சேர்ந்த பிரகிருதி மல்லா என்ற இளம்பெண் அழகான கையெழுத்துக்கு பெயர் பெற்றக்கார. தனது அசாதாரண கையெழுத்துக்காக உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார். இவரின் கையெழுத்து, “உலகின் மிக அழகான கையெழுத்து” என்ற பட்டத்தைப் பெற்றது. தனது 16 வயதில், அவரது பணிகளில் ஒன்று உலகளவில் மக்களின் கவனத்தை ஈர்த்தபோது அவர் இணையத்தில் பரபரப்பானார்.
கையெழுத்து மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அதனை வல்லுநர்கள் மற்றும் நெட்டிசன்கள் பாராட்டினர். அதில், சிலர் இவரின் கையெழுத்து கணினியில் தட்டச்சு செய்தது போல் இருப்பதாகக் கூறினர். டிஜிட்டல் யுகத்தில், தட்டச்சு செய்வது வழக்கமாகிவிட்டது. கையெழுத்து பெரும்பாலும் கவனிக்கப்படுவதில்லை.
பிரகிருதியின் அழகான கையெழுத்து எவ்வளவு மதிப்புமிக்கதாகவும் போற்றப்படக்கூடியதாகவும் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைமை மற்றும் குடிமக்களுக்கு அவர்களின் 51 வது யூனியனை முன்னிட்டு வாழ்த்துக் கடிதம் எழுதினார்.
தனிப்பட்ட முறையில் கடிதத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரகத்திற்கு வழங்கினார்.அவரது குறிப்பிடத்தக்க திறமைக்காக நேபாள ஆயுதப்படைகளால் கூட கௌரவிக்கப்பட்டார்.