சினிமா

கேரவனில் துயரம்!! மனம் திறந்த தமன்னா

இந்தியளவில் பிரபலமான நடிகை தமன்னா. தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற படங்களில் நடித்து தனக்கென ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். 20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். படங்கள் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம்பெற்று வருகிறது. தமன்னா அவரது கேரவனில் நடந்த துயரம் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

” நான் என் கேரவனில் இருக்கும்போது எனக்கு பிடிக்காத ஒன்று நடந்தது. அதனால் மிகவும் மனம் உடைந்த என் கண்கள் குளமாகின. அந்த நேரத்தில் எனக்கு ஷூட்டிங் இருந்தது அதனால் என்னால் அந்த இடத்தில் அழ முடியாது. அப்போது நான் என்னிடம் இது ஒரு உணர்ச்சி மட்டும் தான். அதை நான் கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்னர் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். எனக்கு மிகவும் உதவியது ” என்று கூறியுள்ளார்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *