குற்றவியல் நீதிமன்றத்தை (ICC) தடை செய்வதற்கான டொனால்ட் ட்ரம்பின் முடிவு, கடுமையான குற்றங்களுக்கு தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது என 79 நாடுகளின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர் நீதிமன்றத்தின் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் (79 நாடுகள்) குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு ஆதரவை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இஸ்ரேலை விசாரிப்பதற்கான நீதிமன்றத்தை உத்தரவுக்கு எதிராக ட்ரம்ப் கையெழுத்திட்ட விவகாரம் சர்வதேச சட்டத்தை பலவீனப்படுத்தும் என்றும் கூறியுள்ளனர். மேலும், உலகளாவிய ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு மிக முக்கியமான சர்வதேச சட்டத்தின் ஆட்சியை இது அச்சுறுத்துவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
தொடர்பில் ஸ்லோவேனியா, லக்சம்பர்க், மெக்ஸிகோ, சியரா லியோன் தலைமையிலான அதிகாரிகள் வெளியிட்டுள்ள கூட்டு அறிக்கையில் மேற்படி விடயங்கள் கூறப்பட்டுள்ளது. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் உத்தரவில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்கா நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ள நிலையில் குறித்த விவகாரம் பெரும் பேசுபொருளாகியுள்ளது. வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு பிடியானை பிறப்பித்திருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் அனைவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வெளிப்படையாகவே அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
காசாவை கையகப்படுத்தி பாலஸ்தீனியர்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்ப திட்டம் கொண்டிருப்பதாக ட்ரம்ப் அறிவித்து இருந்தார்.குறித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்ற தரப்பில் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.