இலங்கை

இளம் பெண்களை மிரட்டி பணம் பெற்ற நபருக்கு நேர்ந்த கதி

இளம் பெண்களை ஏமாற்றி பணம் பறித்த முன்னாள் கடற்படை அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிலிமதலாவ பகுதியைச் சேர்ந்தவராகும். அவிசாவளை பகுதியில் மறைந்திருந்த வேளையில் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரியாக தன்னை வெளிப்படுத்திய நபரே மோசடியில் ஈடுபட்டுள்ளதாக, கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபருக்கு எதிராக பணமோசடி தொடர்பான 5 பிடியாணைகளும், போதைப்பொருள் தொடர்பான 2பிடியாணைகளும் ஏற்கனவே பிறப்பிக்கப்பட்டிருந்தமை தெரிய வந்துள்ளது.

இளம் பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டு, அந்தரங்க புகைப்படங்கள் தம்வசம் உள்ளதாகவும், சமூக வலைத்தளங்களில் வெளியிடப்போவதாகவும் மிரட்டியுள்ளார். தவிர்ப்பதாக பணம் வழங்குமாறும் கோரியுள்ளார். பயந்த சில பெண்கள் பெருந்தொகை பணத்தை வழங்கியுள்ளனர்.

பாதிக்கப்பட்ட பல பெண்கள் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *