நாட்டின் தீர்மானங்களை மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா காலை உணவின் போது மேற்கொள்வதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். யூடியூப் தளமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே கூறியுள்ளார்.
அநுரகுமார திஸாநாயக்க பெலவத்தையில் தொடர்மாடி கட்டிடமொன்றில் உள்ள ஒரு சொகுசு வீட்டில் வசிப்பதாக கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். டில்வின் சில்வாவின் வீடும் அதே தொடர்மாடி கட்டிடத்தில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகள் காலத்திலும் வீடுகளில் அமைச்சரவை முடிவுகள் எடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.
மகிந்த ராஜபக்சவின் வீட்டில் அவரின் சகோதரர்களான கோட்டாபய ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோர் இணைந்து நாட்டின் தீர்மானங்களை எடுத்ததை உதாரணமாக காட்டியுள்ளார்.
ஒரு நாட்டின் அரசாங்கம் ஒரு கட்சியை சார்ந்து இருக்கும் எனவும் இடதுசாரி ஆட்சி உள்ள ஏனைய நாடுகளில் அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பு குறித்த கட்சியின் பொதுச் செயலாளரிடமே இருக்கும் எனவும் கூறியுள்ளார்.