அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு வழங்கப்படும் என பிரதமர் ஹரிணி உறுதியளித்துள்ளார்.
அலரிமாளிகையில் ஆசிரியர் அதிபர்கள் தொழிற்சங்கக் கூட்டமைப்பினரை சந்தித்து கலந்துரையாடிய போதே குறிப்பிட்டுள்ளார்.
பதவி உயர்வுகள், சம்பள முரண்பாடுகள், தொழில் பிரச்சினைகள், ஆசிரியர் அதிபர் சேவையில் முறையான இடமாற்றம், பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதித்தல் மற்றும் நிதி சேகரிப்பு, தேசிய பாடசாலைகளில் அதிபர் வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு, மற்றும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.
அரை அரசுப் பள்ளிகளில் வசூலிக்கப்படும் கட்டணம், ஒரு வகுப்பில் மாணவர்களின் எண்ணிக்கையை 35ஆக மட்டுப்படுத்தல் மற்றும் ஆசிரியர் ஆலோசனைப் பணிக்கான பரீட்சை உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
வெற்றிடங்கள் இன்றி சிறுவர்கள் பாடசாலைகளுக்கு அனுமதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சு இதற்கான கடிதங்களை வழங்குவதில்லை என பிரதமர் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.