உலகம்

அமெரிக்காவின் மாகாணத்தை விலைக்கு கேட்ட ஐரோப்பிய நாடு!

அமெரிக்காவிற்கு(USA) கிரீன்லாந்தை(Greenland) உரிமை கோரும் ட்ரம்பின் விருப்பத்திற்கு பதிலடியாக, கலிபோர்னியா மாநிலத்தை டென்மார்க் விலை பேசியுள்ளது. டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) பதவியேற்றதிலிருந்து, பாதுகாப்பிற்கு கிரீன்லாந் அமெரிக்கா நிர்வாகத்தின் கீழ் இருப்பதே சிறந்தது என உரிமை கோரி வருகிறார்.

டொனால்டு ட்ரம்புக்கு பதிலடி அளிக்கும் வகையில் டென்மார்க் மக்கள் களமிறங்கினர் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை டென்மார்க் அரசாங்கம் வாங்க வேண்டும் என குறிப்பிட்டு மக்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

இணைய தளம் ஒன்றை உருவாக்கி அதில் 200,000 மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். மொத்தம் அரை மில்லியன் மக்களிடம் ஆதரவு திரட்ட இலக்காகக் கொண்டுள்ளனர்.

1 டிரில்லியன் டொலர்கள் செலவிட தயாராக இருப்பதாகவும் டென்மார்க் மக்கள் அறிவித்துள்ளனர்.

தேசிய நலன் கருதி நமது நாட்டின் அசாதாரண பாரம்பரியத்தை மேம்படுத்த வேண்டும் என குறிப்பிட்டு, இனி கலிபோர்னியா புதிய டென்மார்க்காக மாறும் என குறிப்பிட்டுள்ளனர். தென் கலிபோர்னியாவில் டென்மார்க் மக்களின் செல்வாக்கு இருப்பதாகவே கூறப்படுகிறது. அமெரிக்காவின் டென்மார்க் தலைநகரம் என்றே அப்பகுதி அழைக்கப்பட்டு வருகிறது. டென்மார்க்கின் அதே உள்கட்டமைப்புகள் கொண்ட அப்பகுதிக்கு டென்மார்க்கின் அரச குடும்ப உறுப்பினர்களும் அடிக்கடி விஜயம் செய்து வருகின்றனர்.

2019இல் ட்ரம்ப் தமது முதல் ஆட்சியின் போதும் கிரீன்லாந்தை உரிமை கொண்டாட முயன்றுள்ளார். அப்போது முடியாமல் போயுள்ளது. கனவை நிறைவேற்ற ட்ரம்ப் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இராணுவத்தை பயன்படுத்தவும் வாய்ப்புள்ளதாக ட்ரம்ப் வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *