இலங்கை

மன்னிப்பு கோரிய அர்ச்சுனா எம்.பி

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் குறித்து மன்னிப்பு கோரியுள்ளார். உத்தியோகபூர்வ முகப்புத்தகத்தில் பதிவொன்றை இட்டு அர்ச்சுனா பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார்.

பதிவில், “என் வாழ்க்கையில் யாருடனும் வம்பு சண்டைக்கு போனதில்லை. துஷ்டனை கண்டால் தூர விலகு என்று என் தந்தை தெளிவாக சொல்லித் தந்திருக்கிறார். கடந்த சம்பவம் ஒரு துன்பியல் சம்பவம். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை விட ஒரு வைத்தியராக மனதுக்குள் ஒரு ஆழமான கவலையை உண்டாக்கி இருக்கிறது.

காயங்களுக்கு மருந்திடும் கைகளால் காயத்தினை ஏற்படுத்தி இருக்கின்றேன். ஒரு பெண்ணை இழிவுபடுத்தி காவாலித்தனம் செய்யும் போது பொறுமையும் ஒரு தடவை செத்து போய்விடுகிறது. ஆழமான வலிகளுடன் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

யாழில் உள்ள தனியார் உணவகம் ஒன்றில் உணவருந்த சென்ற வேளை அங்கு உணவருந்திக் கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா வாக்குவாதப்பட்டு, பீங்கானால் தாக்கியதாக தாக்குதலுக்கு இலக்கான நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர் காவல்துறை விசாரணையில் தெரிவித்துள்ளார்.

குறித்த நபரே தன் மீது தாக்குதல் மேற்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருந்த பின்னணியில் தற்போது தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *