இலங்கை

யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ் அரசியல்வாதிகள் திடீர் விஜயம்

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான குழு செம்மணியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணிமான கனகரட்ணம் சுகாஷ் வழங்கியுள்ளார்.

வியாழக்கிழமை (13), செம்மணி பகுதிக்கு அருகில் அமைந்துள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மின் தகன எரியூட்டி அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அத்திவாரம் வெட்டும் போது மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.தொடர்ந்து, கட்டிட வேலைகளை முன்னெடுத்த நபர், விடயம் குறித்து நல்லூர் பிரதேச சபை மற்றும் மயான அபிவிருத்தி சபையினருக்கு அறிவித்திருந்தார்.

இது குறித்து பொலிஸாருக்கும் அறியப்படுத்தியதை அடுத்து கட்டிட பணிகள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. சம்பவம் தொடர்பில், பொதுமக்கள் அச்சம் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related Posts

Leave A Reply

Your email address will not be published. Required fields are marked *