சினிமாவில் முதல் முறையாக ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய நடிகை யார் தெரியுமா? அவரை பற்றி பார்க்கலாம் வாங்க. குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி , பாலிவுட், டோலிவுட், மோலிவுட் என இந்திய திரையுலகில் கொடிகட்டி பறந்தார். அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி என முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.
80ஸ் 90ஸ் காலகட்டத்தில் முன்னணி நடிகர்கள் கூட ரூ. 1 கோடி சம்பளம் வாங்கியது இல்லை. இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெறுவது என்பது அன்றைய காலகட்டத்தில் விஷயம் ஆகும்.அன்றைய காலகட்டதில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி சாதனை படைததவர் யார் தெரியுமா. அவர் வேறு யாருமில்லை மறைந்த நடிகை ஸ்ரீதேவி தான். உலகளவில் புகழ்பெற்ற இந்திய நடிகையான ஸ்ரீதேவி தான் முதன் முதலில் ரூ. 1 கோடி சம்பளம் வாங்கி இந்திய நடிகை ஆவார்.
அழகாலும், திறமையான நடிப்பாலும் மக்கள் கவர்ந்த , பல கோடி ரசிகர்களை சம்பாதித்தார். ரூ. 1 கோடி சம்பளம் வாங்கிய முதல் இந்திய நடிகை என்கிற பெருமை மட்டுமல்லாமல், சக நடிகர்களை விட அதிக சம்பளம் பெற்ற நடிகை என்கிற பெருமையும் இவரேயே சேரும் குறிப்பிடத்தக்கது.