சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து கொண்டாடப்படும் நடிகராக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். நடிப்பில் கடைசியாக வெளிவந்த அமரன் படம் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 340 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனையும் படைத்தது. வெற்றியின் மூலம் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் எங்கேயோ சென்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். இவர் கைவசம் தற்போது எஸ்கே 23 மற்றும் பராசக்தி என இரண்டு திரைப்படங்கள் உள்ளன. இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முன்னணி நடிகர் சிவகார்த்திகேயனின் 40வது பிறந்தநாள். சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை அவருக்கு தெரிவித்து வருகிறார்கள். மேலும் இன்று அவருடைய படங்களின் அப்டேட்ஸ் தொடர்ந்து வெளிவரவுள்ளது. 40வயது எட்டியுள்ள நடிகர் சிவகார்த்திகேயனின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ. 120 கோடி முதல் ரூ. 150 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது. இவர் தற்போது ரூ. 50 கோடி வரை சம்பளம் வாங்கி வருவதாக கூறப்படுகிறது.
சென்னையில் இவருக்கு சொந்தமான, பல கோடி மதிப்பிலான பிரம்மாண்ட பங்களா இருக்கிறது. ஆனால், இவை யாவும் அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.